கோவை புரோஜோன் மாலில் அமைக்கப்பட்டுள்ள ‘தி ஜங்கிள் புக்’ கண்காட்சி குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது!!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோஜோன் வணிக வளாகத்தில், பவர்கிட்ஸ் என்டர்டெயின்மென்ட், மும்பை DQ என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்து "தி ஜங்கிள் புக்- அட்வென்ச்சர் லைவ் எக்ஸ்பீரியன்ஸ்" கண்காட்சியை நடத்துகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நேற்று (15/8/25) துவங்கி 24/8/25 வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும் கண்காட்சிக்கு  பார்வையாளர்களுக்கு நுழைவு இலவசமாகும். மேலும் குழந்தைகள் பங்கேற்கும்  விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு மட்டும் 149 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கு வரும் குழந்தைகள் உற்சாகத்துடன் இதனை கண்டு களிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments