ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2025 போட்டிக்கான தகுதிச்சுற்று கோயம்புத்தூரில் நடைபெற்றது!!


ட்ரன்ஸ் ஃபேஸ் ஆஃப் கோயம்புத்தூர்,  ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2025 தகுதிச்சுற்று கோவையில் உள்ள அவினாசி சாலையில் அருகே உள்ள ட்ரன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழகத்தில் உள்ள இளம் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஒரு பெரிய மேடையை வழங்கும் நோக்கில், பிரபல நிறுவனங்களான ட்ரன்ஸ், நேச்சுரல்ஸ் மற்றும் டியூப் காஸ்ட் இணைந்து நடத்தும் ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2025 போட்டிக்கான தகுதிச்சுற்று கோயம்புத்தூரில்  நடைபெற்றது.  மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஐரிஸ் ஈவென்ட்ஸ் நிறுவனம் தனது 25-வது ஆண்டு விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு, இந்த ஆண்டு போட்டி டியூப் காஸ்ட் ஐரிஸ்  ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு என்ற புதிய பெயரில் நடத்தப்படுகிறது. இதன் மூலம், மாநிலம் முழுவதிலும் இருந்து திறமையான போட்டியாளர்கள் பங்கேற்றனர். 

ஏற்கனவே, மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் வெற்றிகரமாக தகுதிச்சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இந்த நகரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள், மாநில அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள். கோவையில் நடைபெறும் தகுதிச்சுற்றில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களும்,  அவர்களுடன் சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இணைந்து, மாநிலப் பட்டத்திற்காகப் போட்டியிடுவார்கள்.

போட்டியில் பங்கேற்பவர்களுக்கு நேச்சுரல்ஸ் சலூன்களில் அழகுக்கலை மற்றும் ஆளுமை குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.  

தகுதிச்சுற்று கோவையில் உள்ள ட்ரன்ஸ்  வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரி பிரிவுகளில் ஐயிரா  பெண்களுக்கான பிரிவில் முதலிடமும், ஆண்களுக்கான பெண்கள் குணசீலன் முதலிடம் பெற்றார். திருமணமானவர்கள் பிரிவில்  மகாலட்சுமி பெண்கள் பிரிவில் முதலிடமும், தனுஷ் ஆண்களுக்கான பிரிவில் முதல் இடமும் வென்றனர். 

மாநில இறுதிப் போட்டி சென்னை ஜி.ஆர்.டி ராடிசன் ப்ளூ செப்டம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐரிஸ் ஈவென்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி லதா கிருஷ்ணா செய்திருந்தார். டியூப் காஸ்ட் நிறுவனத்தை சார்ந்த  சுஜா சூரிய நிலா  கூறுகையில்,  திறமையுள்ள அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments