மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு இலவசமாக முடி திருத்தம் செய்துள்ள மனிதநேயம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்துள்ள பெரியபோது மின்கரை சாலை வளந்தாயமரம் பகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர் பகவதி அவர்கள் ஆதரவற்ற நிலையில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இலவசமாக முடி திருத்தி மனிதநேயத்தை மிளிரச் செய்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த நபருக்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றிப் பணியாற்றிய அவரின் செயல் உள்ளூர் மக்களிடையே பாராட்டுக்குரியதாகியுள்ளது.

முடிந்ததை முடியாதவருக்கு செய்வோம் என்ற உயர்ந்த எண்ணத்தை செயலால் காட்டிய பகவதி அவர்களுக்கு அனைவரும் நன்றி தெரிவித்தும் சேவை சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்து வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

பகவதி அவர்களின் செயல் பாராட்டுக்குரியது என்பதை தாண்டி அவரைப் பின்தொடர்ந்து அனைவரும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Comments