தனிநபர் பல சமூகத்தினர் இடையே பிரச்சனைகளை தூண்டும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் மழவராயநத்தம் கிராமத்தில் சுமார் பல சமூகத்தினர் 500 குடும்பம் வசித்து வருகிறார்கள் கடந்த டிசம்பர் 2023 ஆம் ஆண்டு அன்று பெய்த மழையில் நத்தம் சர்வே எண்633/3ல் அவ்வழியாக தண்ணீர் உடைந்து எங்கள் ஊர் வெள்ளத்தில் மிதந்தது அதே இடத்திற்கு அருகில் புனித சூசையப்பர் மரியமதலை அம்மாள் ஆலயம் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆலயத்திற்குட்பட்ட நத்தம் சர்வே எண்636/8  636/9  636/20A  636/20B  636/20C 636/21  636/7  636/4A 636/10 636/11 இந்த சர்வே எண்களுக்கு உட்பட்ட நத்தம் சர்வே எண் 636/3ல் தனிநபர் ஊரில் வசித்து வரும் பல சமூகத்தினர் இடையே பிரச்சனைகளை உருவாக்கும் வகையில் கடந்த 26 8 2025 அன்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் இவர்கள் உதவியுடன் பிரச்சனைக்குரிய இடத்தில் தனிநபர் புனித சூசையப்பர் மரிய மதலை அம்மாள் ஆலய உறுப்பினர்களின் அனுமதி பெறாமல் அவ்விடத்திற்கு அளக்க வந்தார் அனுமதி பெறாமல் ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் அப்படித்தான் அளப்பேன் என்றும் தகாத வார்த்தைகளால் தனிநபர் அசிங்கமாக திட்டினார் வெள்ளூர் கண்மாயிலிருந்து வரும் நீர் பாய்ச்சல் வாய்க்கால் சர்வே எண் 636 /3 வழியாகத்தான் வரும் அந்த இடத்தில் தனி நபர் அரசு சம்பந்தமான புதிய கட்டிடம் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறார்.

அந்த இடத்தில் அரசுக்கு சம்பந்தமான பொது கட்டிடம் வந்தால் எங்கள் ஊரில் பல சமூகத்தினர் இடையே பிரச்சனைகள் உருவாகும் வழி உள்ளது ஆகையால் தனிநபர் மீது ஆழ்வார் திருநகரி காவல் நிலையத்தில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவே பிரச்சனைக்குரிய அந்த நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து ஜாதி மத மோதல்களை தடுத்திட கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு மழவ ராயநத்தம்  பங்குத்தந்தை மற்றும் சார்லஸ் ஆலயத்தின் பொறுப்பாளர் தெரிவித்தனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-பரணி பாலா.

Comments