தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் வட்ட கிளை மாநாடு நடைபெற்றது
தூத்துக்குடி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிதி திருத்த மசோதாவை கண்டித்து நாடாளுமன்றத்தினை முற்றுக்கையிடும் வகையில் ஓய்வூதியர்கள் பேரணி நடைபெற இருக்கிறது – கோவில்பட்டியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பர்வதராஜன் பேட்டி.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள காந்திமண்டபத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் வட்ட கிளை மாநாடு நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும், புதிய மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் அனைவருக்கும் கட்டணமில்ல சிகிச்சை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத்தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் பர்வதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்;
மத்தியரசு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நிதி திருத்த மசோதாவை தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம், இது ஓய்வூதியர்களின் உரிமையை பறிக்க கூடிய விதத்தில் இருக்கிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் சார்பில் மாபெரும் போராட்டங்களை நடத்தி உள்ளோம், அடுத்து டெல்லியை நோக்கி டெல்லி சாலோ என்று நாடாளுமன்றத்தினை முற்றுக்கையிடும் வகையில் ஓய்வூதியர்கள் பேரணி நடைபெற இருக்கிறது.திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிபடி 70வயது நிறைவடைந்த ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இம்மாநாட்டிற்கு வட்ட தலைவர் சிந்தாமதார்பக்கீர் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் பாக்கியமுத்து, செல்லச்சாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் நாயகம் வரவேற்புரையாற்றினார். செயலாளர் சுதாகர் வேலை அறிக்கை மற்றும் பொருளாளர் பொன்னுராஜ் நிதி அறிக்கை வாசித்தனர். மாவட்ட தலைவர் சாம்பசிவம், மாவட்ட செயலாளர் முத்தையா, மாவடட பொருளாளர் கண்ணையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மாநில பொதுச்செயலாளர் பர்வதராஜன் சிறப்புரையாற்றினார்.
செயற்குழு உறுப்பினர் சுரேஷ் நன்றியுரையாற்றினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.
Comments