மகனின் திருமண விழாவை முன்னிட்டு மாட்டு வண்டிகள் பந்தயம்!!

மகனின் திருமண விழாவை முன்னிட்டு மாட்டு வண்டிகள் பந்தயம் கோலாகலம்..  மாட்டு வண்டி பந்தய வீரர் மட்டுமல்லாமல், மாட்டு வண்டி பந்தயத்தின் மீது தீராத மோகம் ....!!!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விளாத்திகுளம் அருகே மகனின் திருமண விழாவை முன்னிட்டு மாட்டு வண்டியில் பந்தயம் நடத்திய மாட்டுவண்டி பந்தய வீரர் மாட்டு வண்டி பந்தயத்தின் மீது தீராத மோகம் கொண்டவர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேக்ளா பந்தயம் நடைபெறுவது வழக்கம்..! அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் அதிக அளவில் மாட்டு வண்டி  போட்டிகள் வழக்கமாக நடைபெறும்.

அதிலும் விளாத்திகுளம் பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும் நடந்த ஒரு வருடத்திற்கு 2000-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் சாமி என்பவரது தனது இளம் வயதிலிருந்து மாட்டுவண்டிகள் பந்தயத்தின் மீது தீராத காதல் கொண்டுள்ளார். இதனால் விளாத்திகுளம் பகுதியில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளில் மட்டு வண்டி பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது மூத்த மகன் முத்துப்பாண்டி என்பவரின் திருமணத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தி அசத்தினார். அதேபோல் கடந்த ஆகஸ்ட் 28 தேதி நடைபெற்ற தனது இளைய மகன் முரளி என்பவரின் திருமண விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் விருசம்பட்டி கிராமத்தில் நடத்தினார்கள்.

பூஞ்சிட்டு தேன்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடியில் ராமநாதபுரம் திருநெல்வேலி மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் ஓட்டி வந்த சாரதியும் பின் சாரதிக்கும் , பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப் பட்டது. 

அதேபோல் மாட்டு வண்டி பந்தயத்தை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் தொடங்கி வைத்தார்கள். காண வந்த பொதுமக்கள் அனைவருக்கும், அசைவம் உணவு அன்னதானம் வழங்கியும், ஆறுமுகம் சாமி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments