'தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது' பெற்ற கோவில்பட்டி மேற்கு நிலைய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து!!

தமிழ்நாடு அரசு மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து "தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு" வழங்கப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, காவல் நிலையம் சார்பாக அதற்கான விருதை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் அவர்கள் கடந்த  (06.09.2025) அன்று சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை பெற்றார்.

மேற்படி விருது பெற்ற கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தின் ஆய்வாளர் தநவநீதகிருஷ்ணன் உட்பட சார்பு ஆய்வாளர்களை இன்று (08.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டி எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.

இந்நிகழ்வின் போது கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் உடனிருந்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

 - ராஜ்குமார்.

Comments