தூத்துக்குடியில் மாநில அளவிலான கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மின்னொளி கபடி போட்டியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சந்தன மாரியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டிக்கு விஜயராகவன் தலைமை வகித்தார். கபடி கந்தன், கருணாகரன், முத்து கணேஷ்குமார், சங்கரேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகராஜ் வரவேற்றார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கபடி போட்டியை தொடங்கி வைத்தார். முதல்போட்டியில் லயோலா அணியை வீழ்த்தி சேரன் அணி வெற்றி வெற்றது.
இன்று நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். கபடி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அர்ஜூனா விருது பெற்ற மணத்தி கணேசன், அமெச்சூர் கபடி கழக இணைச்செயலாளர் கபடி கந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.
Comments