சிறிய அளவிலான ஊசிகள் மூலம் பெரிய அறுவை சிகிச்சைகளை தவிர்க்கும் புதிய மருந்துவமுறை!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை காந்திபுரம் 100அடி சாலையில் பெத்தேல் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இம்மருத்துவமனையில், எலும்பியல் நிபுணராக, டாக்டர் சாமுவேல் அனந்தராஜ் சிறிய அளவிலான ஊசிகள் மூலம் பெரிய அறுவை சிகிச்சைகளை தவிர்க்கலாம் எவ்வாறான சிகிச்சைகளுக்கு இந்த முறை, கை கொடுக்கின்றது என செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது.
எலும்பு முறிவு, மூட்டுவலி, மற்றும் ஆறாத புண்களுக்கான சிகிச்சையில், புதிய முறைகளை பயண்படுத்தி அதில் வெற்றி கண்டுள்ளதாகவும், பெரிய அறுவை சிகிச்சை, நீண்ட நாள் உள்நோயாளி, நீண்ட கால சிகிச்சை எனும் பயத்தை முற்றிலும் இந்த சிகிச்சை முறை மாற்றியுள்ளது என தெரிவித்தார்.
ஹெட்ரோஜென் மற்றும் ஆக்சிஜன் மூலமாக, மூதுகுதண்டு பாதிக்க பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது வயதானவர்கள் கூட, குறைந்த நாட்களில் குணமடைகின்றனர் எனவும், இதற்காக சிகிச்சையை, முகர்ஜி முறை என்று கூறபடுவதாகவும், இந்த முறை சிகிச்சையில், மூட்டுவலி, தோல்பட்டை இறுக்கம், கழுத்து, முதுகு வலி, பாதவலி, தசைநார், மற்றும் குறுத்தெழும்பு காயங்கள், முடக்குவாதம், சரவாங்கி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிகின்றது என தெரிவித்தார்.
இத்தகைய சிகிச்சைகளில் குறைந்த அளவு மருந்துகளுடன், ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்குவதுடன், மூட்டு இடைவேளையில் ஒசோன் எனப்படும் சிகிச்சை அளிக்க படும், இத்தகைய சிகிச்சையானது, இரத்தத்தை ஒசோனுடன் சிகிச்சை செய்து மீண்டும் செலுத்த படும், ஊசி மூலமாக புதிய திசுக்களை அவை, உருவாக்குவதால் நோயாளிகளுக்கு வலிகளை முற்றிலும் நீக்கி உடனடியாக அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக கூறினார். மேலும் ஹைட்ரஜோன் தெரப்பி முறைகள் மூலமாக, நீரிழிவு, மற்றும் இரத்த குழாய் சிக்கல்களால் ஏற்படும் ஆழமான, மற்றும் ஆறாத புண்களில் ஏற்படும் நோய் தொற்றை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி விரைவில் அவர்கள் குணமடைய செய்வதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments