கோவையில் நியூரோடைவர்ஸ் பாதிப்படைந்தவர்களை மேம்படுத்துவது தொடர்பான சமூக கருத்தரங்கம்!!
நியூரோவெல் இன்சைட்ஸ் மற்றும் தேர்ட் ஐ – ஆட்டிசம் மையம் சார்பாக நடைபெற்றது!!
நியூரோடைவர்ஸ் எனும் நரம்பியல் குறைபாடு தொடர்பான நோய்களால் பாதிப்படைந்தவர்களை சமூகத்தில் அங்கீகாரம் மற்றும் அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை வழங்குவது தொடர்பான நியூரோ யுனிட்டி எனும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் கே.எம்.சி.எச்.மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நியூரோவெல் இன்சைட்ஸ் மற்றும் தேர்ட் ஐ – ஆட்டிசம் மையம் இணைந்து நடத்திய இதற்கான துவக்க விழா, நியூரோவெல் இன்சைட்ஸின் நிறுவனர் பவின் கிருஷ்ணராஜ் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இதில், சரணாலயத்தின் நிறுவனர் வனிதா ரெங்கராஜ்,தேர்ட் ஐ ஆட்டிசம் மைய இயக்குனர் சரண்யா ரங்கராஜ்,மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் கார்த்திக் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
நரம்பியல் தொடர்பான நியூரோ டைவர்ஸ் பாதிப்படைந்த பெரியவர்களை சமூகத்தில் அனைத்து தரப்பினரும் அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது,மேலும் தொழில் முறை சார்ந்து அவர்களை சமூகத்தில் எவ்வாறு மேம்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து தீர்வுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக நியூரோடைவர்ஸ் நோயால் சமூக தொடர்பு மற்றும் தொடர்பு கொள்ளலில் சிரமங்கள்,கவனக்குறைபாடு, அதிக சுறுசுறுப்பு,மற்றும் மு ன்னெச்சரிக்கை இல்லாத தன்மை போன்ற தன்மைகளுக்கு முறையான பயிற்சிகள் வழங்கி அவர்களை சமூகத்தில் தாமாக இயங்க தன்னம்பிக்கை அளிப்பதற்கான புதிய முயற்சியாக இந்த மாநாட்டை நடத்துவதாக சரண்யா ரங்கராஜ் தெரிவித்தார்.
நரம்பியல் பன்முகத்தன்மை கொண்ட பெரியவர்களை மேம்படுத்துவதற்கான தொழில் மற்றும் சமூக பாதைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில்,நிபுணர்கள், கல்வியாளர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments