மக்களுடன் ஸ்டாலின் உங்களுடன் மாநகராட்சி செயல்படுகிறது. அனைவரும் முழு ஓத்துழைப்பு வழங்கி வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்! - மேயா் ஜெகன் பெரியசாமி பேச்சு!!

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தார்.  மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி முன்னிலை வகித்தாா். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் மாநகராட்சி பகுதியில் கடந்த 20 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் அடிப்படையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, சாலை, கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளுக்கு மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மண்டலத்திலும் சூழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் ெபாதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். மாதத்தில் ஒரு நாள் மாநகராட்சியிலும் மாதாந்திரகூட்டமும் நடைபெறுகிறது.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில்பெறப்பட்ட மாநகராட்சி சம்பந்தப்பட்ட 1210 அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது தெற்கு மண்டலத்தில் 651 மனுக்கள் பெறப்பட்டுள்ளது நிலையில் 559 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு வந்துள்ளது. 92 மனுக்களுக்கு மட்டும் தீர்வு காணப்படாமல் உள்ளது. விரைவில் அதற்கும் தீா்வு காணப்படும். 964 சாலைகள் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு 400 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மீதி சாலைகள் மழை காலம் என்பதால் அமைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மழை காலம் முடிந்த பின் தொடங்கும். சில இடத்தில் முன்னுரிமை அடிப்படையில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களுக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது தெற்கு மண்டலத்திற்குட்பட்ட இந்த பகுதியில் சிறு குறு தெருக்களில் மழைநீர் எங்கும் தேங்காமல் இருக்க தானாகவே செல்லும் வகையில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டு உள்ளது தெற்கு மண்டலத்தில் உள்ள சிறிய சாலைகளில் முன்பு மோட்டார் மூலம் வைத்து மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது தற்போது அந்த சூழ்நிலை இல்லை 16 17 ஆகிய இருவாா்டுகள் 2வது வாா்டு ஆதிபராசக்தி ஆகிய தெருக்களில் காற்றாட்டு வெள்ளம் மூலம் மழை நீர் தேங்கி இருந்ததால் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது ஏற்கனவே பெய்த மூன்று நாள் மழை 5 சென்டிமீட்டா் 7 சென்டிமீட்டா் 9 சென்டிமீட்டா் மழையே அதிக அளவு பெய்துள்ளது மழை நீரை பற்றி கவலைப்பட வேண்டாம் அதுக்கேற்றாற்போல் பணிகள் நடைபெற்று வருகிறது தனியார் காலி இடத்தில் தான் தற்போது மழைநீர் தேங்கியுள்ளது அந்த இடத்தில் ஆயுள் பால் மற்றும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது..

மாநகராட்சி முழுவதும் மருத்துவ முகாம் ஆங்காங்கே  சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் நடைபெறுகிறது 60-வது வார்டு கோயில் பிள்ளை நகரில் தான் கோரம்பள்ளம் பகுதியிலிருந்து 12 கிலோ மீட்டர் வழித்தடம் மூலம் தேவையற்ற மழைநீா் கடலுக்கு செல்லும் வகையில் வழித்தடம் இங்குதான் உள்ளது. 60 வார்டுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 40 வாா்டுகளில் பாதாள சாக்கடை பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. இந்த பகுதி உள்பட மற்ற பகுதியில் உள்ளவைகளும் விரைவில் முடிக்கப்படும் 3 டிவிசன் அமைக்கப்பட்டு கண்காணிப்பதற்கென்று 3 வாா்டுக்கு ஓரு அதிகாாி நியமணம் செய்துள்ளோம். மக்களுடன் ஸ்டாலின் உங்களுடன் மாநகராட்சி செயல்படுகிறது. அனைவரும் முழு ஓத்துழைப்பு வழங்கி வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும். என்று மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா். 

கூட்டத்தில் இணை ஆணையா் சரவணக்குமாா், மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன் இளநிலை பொறியாளர்கள் செல்வம், லெலின், துணை பொறியாளர்கள் துர்காதேவி, பாக்கியலட்சுமி, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், சுகாதாரம் நிர்வாகதுறை அலுவலா்கள் சிவபிாிதா, ெகளாி, அழகுலட்சுமி, விக்னேஷ்வரன், சரவணக்குமாா், மாாி சத்யா, சிவராம்,  மேற்பாா்வையாளர் சுப்பிரமணியன்,கவுன்சிலர்கள் சரவணகுமார், விஜயகுமார், பட்சிராஜ், வெற்றி செல்வன், ராஜேந்திரன், முத்துவேல், வைதேகி, ராஜதுரை,வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், பிரசாந்த், வசந்தி பால்பாண்டி, பகுதிசெயலாளர் மேகநாதன், ஆதிதூதா் தேவாலய பங்குதந்தை வில்லியம் உள்பட அரசுத்துரை அலுவலா்கள் பொதுமக்கள்உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-பூங்கோதை நடராஜன்.

Comments