விளாத்திகுளத்தில் இராஜராஜ சோழனின் 1040 வது சதய விழா இனிப்புகளோடு கொண்டாடப்பட்டது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் இராஜகுல மகளிர் சமுதாய நல சங்கம் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சார்பில் சோழப்பேரரசர் மாமன்னர் இராஜராஜ சோழரின் 1040 வது சதய விழா விளாத்திகுளத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன்படி விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த சோழப் பேரரசர் இராஜராஜ சோழரின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயன் உள்பட அரசியல் கட்சியினர் சமூக அமைப்புகள் மற்றும் பொறுப்பாளர்கள்  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின் இனிப்புகள் வழங்கப்பட்டது இந் நிகழ்வில் வாதிரியார் சமுதாய சங்கத் தலைவர் குணசேகரன் வாதிரியார். விளாத்திகுளம் வட்டார முக்குலத்தோர் சமுதாயத் தலைவர்  சுப்பிரமணியத்தேவர் பசும்பொன் பழனிச்சாமி நடராஜன் தங்கச்சாமி மற்றும்

விளாத்திகுளம் வாதிரியார் ராஜகுல மகளிர் சமுதாய நல சங்க நிறுவனர் மாலினி நாச்சியார் தலைவர் மாரியம்மாள் நாச்சியார் உள்ளிட்ட ஏராளமான வாதிரியார் ராஜகுல மகளிர் சமுதாய நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு இராஜராஜ சோழரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாகவும் கள்ளர் மகா சங்கம் சார்பாகவும் இந்துவாதிரியார் அறக்கட்டளை மற்றும் வாதிரியார் சோழர் மஞ்சள் படை அறக்கட்டளை  வாதிரியார் சமுதாய சங்கம்  சோழர்கள் பெரும் பற்று சங்கம் சோழ குல வாதிரியார் ராஜாக்கள் சமுதாய நல சங்கம் திருச்செந்தூர் வாதிரியார் மடம் சூர்யா குல வாதிரியார் உறவின்முறை சங்கம் இச்சங்கத்தில் உள்ளவர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவை சிறப்பாக நடத்தினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் 

-பூங்கோதை நடராஜன்.

Comments