வேதாந்தா கார்ப்பரேட் கிரிக்கெட் பிரிமியர் லீக் 2025 துவக்க விழா நடைபெற்றது!!

கோவை வேதாந்தா அகாடமி சிபிஎஸ்சி ரெசிடென்சியல் பள்ளி சார்பில் வேதாந்தா கார்ப்பரேட் கிரிக்கெட் பிரிமியர் லீக் 2025 துவக்க விழா நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்போட்டிகள் டிசம்பர் 7 வரை வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். 

கோவை போடிபாளையத்தில் அமைந்துள்ளது வேதாந்தா அகாடமி சிபிஎஸ்சி ரெசிடென்சியல் பள்ளி. இப்பள்ளியின் சார்பில் வேதாந்தா கார்ப்பரேட் கிரிக்கெட் பிரிமியர் லீக் 2025 போட்டிகளின் துவக்க விழா கோவையில் நடைபெற்றது. 

இப்போட்டிகளை பேட்டிங் செய்து வைத்து, துவக்கி வைத்து பேசிய வேதாந்தா அகாடமி சிபிஎஸ்சி ரெசிடென்சியல் பள்ளியின் தலைவர் திரு. A. சிவகுமார் அவர்கள் கூறியதாவது :- மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 32 கார்ப்பரேட் நிறுவனங்களின் அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இப்போட்டிகள் டிசம்பர் 7 வரை வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 15 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசு பெற்ற அணிக்கு ரூபாய் 10 ஆயிரம் மற்றும் கோப்பையும் மூன்றாம் பரிசு பெற்ற அணிக்கு ரூபாய் 7,500.00 மற்றும் கோப்பையும் நான்காம் இடம்பெற்ற அணிக்கு ரூபாய் 5  ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. 

மேலும் இப்போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாட வீரர்களுக்கு சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர், சிறந்த ஃபீல்டர், சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த கேட்ச்சர், மோஸ்ட் பவுண்டரிஸ் மற்றும் அதிக சிக்ஸ் அடித்தவர்கள் மற்றும் ஹார்ட் டரிக்ஸ் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 

துவக்க விழா நிகழ்ச்சியில் வேதாந்தா அகாடமி சிபிஎஸ்சி ரெசிடென்சி பள்ளியின் தாளாளர் திரு. ஓம் சரவணன் முன்னிலை வகித்தார். இயக்குனர் சுதர்சன் ராவ், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கு பெற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments