கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் அருகே வாகனங்கள் காப்பமாக மாறிய சாலை! – மக்கள் பயன்படுத்த முடியாத நிலை! – நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் அந்த சாலையின் இருபுறமும் பலரும் வாகனங்கள் நிறுத்தி அந்த சாலையை வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றி வைத்துள்ள நிலை உள்ளது. மேலும் சாலையை ஆக்கிரமித்து கடைகளும் உள்ளதால் அந்த சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சாலை சேதமடைந்து சீரமைக்காத நிலையில் ஆக்கிரமிப்புகளால் அந்த சாலையை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், வாகனம் நிறுத்து இடமாக மாறிவருவதை தடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் மணிகண்டனிடம் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர்.
உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தங்கள் அமைப்பு சார்பில் வாகன காப்பகம் நடத்துவதற்கு தங்களது உரிய அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதில் வழக்கறிஞர் சரவணன், சமூக ஆர்வலர்கள் ராஜேஷ் கண்ணன், சுதாகரன், பரமசிவம், செந்தில்குமார், சேது ராமன், முத்துராஜ் ,கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
- ராஜ்குமார்.
Comments