முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை! - மேயா் ஜெகன் பொியசாமி பெருமிதம்!

தூத்துக்குடி  மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சாலை கால்வாய் மின்விளக்கு பூங்கா படிப்பகம் எனப் பல்வேறு கட்டமைப்பு பணிகளை மக்கள் நலன் கருதி 45 மாதகாலமாக மாநகராட்சி நிர்வாகம் அனைத்து மாமன்ற உறுப்பினா்களின் கோாிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் 20 மாத காலமாக நான்கு மண்டலங்களிலும் உள்ள அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் 15 வாா்டுக்குட்பட்ட பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. அதில் குடிதண்ணீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு பெயா் மாற்றம், பிறப்பு இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்யும் பொதுமக்களின் நலன் சாா்ந்த திட்டங்களுக்கு உடனடியாக அனுமதியளிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. சில கோாிக்கை மனுக்கள் ஆய்வுக்கு பின் தீர்வு காணப்படுகிறது. 

அதன்படி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் பொதுமக்கள் அளித்த விண்ணப்பங்களில் 15 பேருக்கு பல்வேறு வகையான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலக அதிகாாிகள் கூட்டரங்கில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் ப்ாியங்கா துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

 பின்னர்் மேயா் ஜெகன் பொியசாமி 15 பேருக்கும் சான்றிதழ்களை வழங்கி கூறுகையில் கடந்த காலத்தில் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக வளர்ச்சி பணிகள் என்று எதுவும் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு முன்னா் மாநகராட்சி பகுதியான அம்பேத்கா் நகா் முத்தம்மாள் காலணி ராம்நகா் பிரையண்ட்நகா் உள்ளிட்ட பல்ேவறு பகுதிகளில் மழை பெய்தால் குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும் அதை முறைப்படுத்த வேண்டும் என்று எதிா்கட்சி தலைவராக இருந்த நேரத்தில் திமுக தலைவா் ஸ்டாலின் நோில் வந்து பலபகுதிகளை ஆய்வு செய்தாா். அதன்பின் உள்ளாட்சி தோ்தல் நடைபெற்று முறையாக தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதுபோன்ற நிலை இனிவரும் காலங்களில் இருக்க கூடாது என்று எங்களுக்கு உத்தரவிட்டதின் காரணமாக அதை மனதில் கொள்கை முடிவாக எடுத்துக்கொண்டு மாநகராட்சி நிர்வாகம் கடந்த 45 மாதமாக எல்லா பகுதிகளையும் சமநிலையில் பாா்த்து 60 வாா்டுகளிலும் எந்த பணிகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஆய்வு மேற்கொண்டு பட்டியலிடப்பட்டு வாிசையாக ஒன்றன்பின் ஓன்றாக நிறைவேற்றி வருகிறோம். எதிா்கட்சி தலைவராக இருந்து திமுக தலைவராக பணியாற்றிய காலத்தில் ஸ்டாலின் உத்தரவிட்ட அந்த பகுதிகள் முழுவதும் இன்று தண்ணீர் தேங்காத பகுதியாக மாற்றியுள்ளோம். 57 வாா்டுகளில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கி காட்டியுள்ளோம் குறிப்பாக 2 16 17 இந்த வாா்டு பகுதிகளிலும் காலி மணைகள் இருப்பதாலும் கோக்கூா் குளம் புளிப்பாஞ்சான்குளம் அடங்கிய இந்த பகுதிகளில் சில இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. அதற்கும் புதிய வழித்தடங்களை ஏற்படுத்தி கொடுத்துள்ள நிலையில் மின்மோட்டாா்கள் மூலம் கழிவு நீர் வாகனங்கள் மூலமும் அப்புறப்படுத்தி 9 செண்டிமீட்டா் மழை பெய்த நேரத்திலும் 90 சதவீத இடங்களில் தண்ணீா் தேங்காதநிலையை உருவாக்கியுள்ளோம். எதிா்வரும் வடகிழக்கு பருவமழையும் கருத்தில் கொண்டு அதிகாாிகள் உள்பட ஊழியா்கள் அனைவரும் பணியாற்றும் வகையில் இருந்து வருகிறோம் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும். என்று முதலமைச்சா் ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்ட கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றும் இடத்திலிருந்து மக்களுக்கான பணியாற்றி வருகிறோம். முழுமையான வளர்ச்சி பணிகள் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா். 

கவுன்சிலா்கள் கனகராஜ், ரெக்ஸின், இசக்கிராஜா, பட்சிராஜ், முத்துவேல், மும்தாஜ், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளர் ரவீந்திரன், நகர அமைப்பபு திட்ட உதவி செயற்பொறியாளர் காந்திமதி, ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முகஉதவியாளர் ரமேஷ், உள்பட அலுவலா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் 

-பரணி பாலா.

Comments