மாவட்ட ஆட்சித் தலைவரா அல்லது திமுகவின் மாவட்ட செயலாளரா.. இரும்படிக்கும் இடத்தில் ஈக்களுக்கு என்ன வேலை ? முனைவர்.சம்பத்குமார் ஆவேசம்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆணையின்படியும், பொதுச்செயலாளர் வழிகாட்டுதலின்படியும், தூத்துக்குடியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டியை சேர்ந்த தவெக மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் முனைவர்.சம்பத்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில்,பீகாரைப்போல தமிழ்நாட்டிலும் வாக்குத் திருட்டை மேற்கொள்ள ஒன்றிய பாஜக நினைத்தால் அதை தமிழக வெற்றிக் கழகத்தினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். எங்கள் வாக்குரிமையை பறிக்க நினைத்தால் அதை எதிர்த்து முதல் ஆளாக நாங்கள் குரல் கொடுப்போம். அதேநேரம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பது போல நடித்துக் கொண்டு தமிழ்நாட்டில் வீடு வீடாக கணக்கீட்டுப் படிவத்தை விநியோகம் செய்யும் திமுகவினரை கண்டிக்கிறோம்.
மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் தனது கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் ஆணையத்தின் பணிகளில் ஆளும் திமுகவின் தலையீட்டை அனுமதித்தால் அல்லது அதை தடுக்க இயலாதவராக இருந்தால் அவர் தேர்தல் நடத்தும் தகுதியை இழந்தவராக ஆகிவிடுவார். மாவட்ட ஆட்சித் தலைவரா அல்லது திமுகவின் மாவட்ட செயலாளரா என்ற கேள்வி எழாமல் இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கைகளில் ஆளும் திமுகவின் தலையீட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத்-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
- ராஜ்குமார்.
Comments