கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி நினைவு தினம் மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ் மரியாதை!!

வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி கயத்தாறில் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறில் அமைந்துள்ள திமுக மாவட்ட கவுன்சிலர் அலுவலகத்தில் வைத்து, சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 89 -வது நினைவு தினமான இன்று அவரின் தியாகத்தை போற்றும் வகையில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் பிரியாகுருராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நவம்பர் 18 'கப்பலோட்டிய தமிழன்' வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார். அவர் குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று அழைத்தார்கள் தலைவர்கள் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஜோதி டிரான்ஸ்போர்ட் சுகன், கிளைச் செயலாளர் தெற்கு இலந்தைகுளம் ஆறுமுகம், தொழிலதிபர் பாலு,  ராஜாபுதுக்குடி திமுக கிளைக் கழக செயலாளர் சதீஷ் குமார், பால்ராஜ், கயத்தாறு மகேந்திரன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

 - ராஜ்குமார்.

Comments