அரசுப் பள்ளி ஆசிரியரைக் கைது செய்யக்கோரி புதூர் தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டம் ஒத்திவைப்பு!!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த அந்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் தேவராஜன் என்ற ஹென்றி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் சீபா இருவரையும் உடனடியாக கைது செய்ய கோரி தமிழக வெற்றி கழகத்தின் புதூர் ஒன்றியம் சார்பில் பள்ளி வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற தமிழக வெற்றி கழகத்தினரை அழைத்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் இன்னும் இரண்டு நாட்களில் குற்றவாளியை கைது செய்து விடுவோம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
பிரச்சனையின் தீவிரத்தை எடுத்துக் கூறி குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட காவல்துறை குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என்று உறுதி அளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புதூர் ஒன்றிய பொறுப்பாளர் செண்பககனி, நகர பொறுப்பாளர் பொன்னுசாமி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், எட்டையபுரம் நகர பொறுப்பாளர் கனகராஜ், புதூர் மேற்கு ஒன்றிய துணை பொறுப்பாளர் கபாலீஸ்வரன், புதூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளர் அஜித் குமார், கதிரவன், சிவா, அழகு, ராஜ், முரளி, சேகர், சின்னராஜ், கருப்பசாமி மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.
Comments