SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் த.வெ.க. ஆர்ப்பாட்டம்!! மாவட்ட நிர்வாகி கோவில்பட்டி சீனிபுஸ்பா கண்டனம்!!
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின்பேரில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் ( 16.11.25 ) அன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி விவிடி சந்திப்பு அருகில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தனர்.
நிருபர்களை சந்தித்த சீனிபுஸ்பா கூறியதாவது :
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பது போல நடித்துக் கொண்டு தமிழ்நாட்டில் வீடு வீடாக கணக்கீட்டுப் படிவத்தை விநியோகம் செய்யும் திமுகவினரை கண்டிக்கின்றேன்.
இவர்கள் செய்யும் இந்த சட்டத்திற்கு முரண்பான செயல்களை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்கள் கண்டிக்க வேண்டும்.
மேலும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள அதிகாரி செய்ய வேண்டிய வேலை தனி ஒரு கட்சியில் உள்ள உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் யாரேனும் கையில் எடுத்துக் கொண்டு எங்களது தமிழக மக்களின் வாக்குரிமையில் மீது கை வைத்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும்,
2021.. 2024ல் ஓட்டுரிமை வைத்து ஓட்டு போட்ட நபர்களுக்கு இதில் யாரேனுக்கும் இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்குரிமை இல்லை என்றால் மாபெரும் போராட்டத்தை நடத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம்.
ஒரு வேலை அரசாங்க வேலை தனி ஒரு அரசியல் கட்சி இணைந்து செயல்பட்டால் அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று சீனி புஷ்பா கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
- ராஜ்குமார்.
Comments