கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகம் இன்று திறப்பு!!

கோவை: ஒரு வருடத்துக்கு மேலாக பாரம்பரியத் தோற்றத்துடன் புதுப்பிக்கப்பட்ட கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்த புதிய அலுவலகத்தை கோவை மாவட்ட ஆட்சியரும் SPCA தலைவருமான திரு. பவன் குமார் கிரியப்பனவர், ஐ.ஏ.எஸ்., திறந்து வைக்கிறார்.

இவ்விழாவுடன் இணைந்து RID 3206 ரோட்டரி கிளப்புகள் சார்பில் விலங்குகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி இயக்கமும் தொடங்கப்படுகிறது. சமூக விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

"இந்த சங்கம் இரக்கம்,சேவை மற்றும் விலங்கு நலனுக்கான எங்கள் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என Rtn. Dr. அபர்ணா ஸுங்கு, துணைத் தலைவர், கோவை SPCA தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments