கோவையில் டி.வி.எஸ்.மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டரான(TVS Orbiter) ஆர்பிட்டர் அறிமுகம்!!

நவீன அனைத்து தொழில் நுட்ப அம்சங்களையும் உருவாக்கி மிக நீண்ட இருக்கையை கொண்ட ஆர்பிட்டர்  ஸ்கூட்டர் குடும்ப பயணங்களுக்கு ஏற்றது என  ஆர்பிட்டரை அறிமுகபடுத்திய டி.வி.எஸ்.மோட்டார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வர்த்தக டி.ஜி.எம். தகவல்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நூற்றாண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்ட டி.வி.எஸ்.மோட்டார்ஸ் நிறுவனம் , இந்தியாவின் முன்னனி  மோட்டார் சைக்கிள் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

உலக அளவில் பல்வேறு  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் டி.வி.எஸ்.நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப  புதிய வாகனங்களை அறிமுகபடுத்துவதில்  தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக எலக்ட்ரிக் வாகன சந்தையில் தனது அதி நவீன தொழில் நுட்ப வசதிகளை உள்ளடக்கிய டி.வி.எஸ்.ஆர்பிட்டர்(TVS Orbiter) எனும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகபடுத்தி உள்ளது.

இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதில் டி.வி.எஸ்.மோட்டார் நிறுவனத்தின் இ.வி.வர்த்தக  டி.ஜி.எம்.ரிஷு குமார் புதிய ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகபடுத்தி பேசினார்.

அப்போது பேசிய அவர்,

ஆர்பிட்டர் இ.வி.மாடல் நீளமான இருக்கைகளுடன் குடும்பத்தினர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 158 கிமீ வரை பயணிக்கும் IDC வரம்பு, க்ரூஸ் கண்ட்ரோல், மலைப் பகுதிகளில் பின்னோக்கி நகராமல் பாதுக்காகும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட், 34-லிட்டர் அளவுள்ள விசாலமான பூட்ஸ்பேஸ் மற்றும் பல இணைக்கப்பட்ட நவீன அம்சங்கள் என இரு சக்கர இ.வி.வாகன பிரிவிலேயே முதல் முறையாக பல அதி நவீன தொழில் நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக சாலைகளில் பயணிக்கும் போது மேம்பட்ட நிலைத்தன்மை மற்றும் சௌகரியமான பயணத்திற்காக இ.வி.இரு சக்கர வாகன துறையிலேயே முதல் முறையாக 14 இன்ச் அளவுடன் கூடிய முன் சக்கரத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக அவர் கூறினார்.

எக்ஸ் ஷோரூம் விலையாக ரூபாய் 1,03,100 விலையில்,பல்வேறு அசத்தலான வண்ணங்களில்  கிடைக்கும் வகையில் இதனை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மேம்பட்ட ஏரோடைனமிக் செயல்திறனுடன் கவர்ச்சிகரமான பன்னோக்கு வசதிகளாக,ஸ்ட்ரெய்ட் லைன் ஃபுட்போர்டு மற்றும் நீண்ட பிளாட்ஃபார்ம் இருக்கையுடன் கூடுதல் சௌகரியம், அதிக இட வசதி கொண்டதாக ஆர்பிட்டரை உருவாக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

TVS Orbiter இணைப்பு தொழில்நுட்பத்தினால் செயல்படும் மொபைல் செயலி, முன்பக்கம் அட்டகாசமான வைசருடன் முன் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் போன் அழைப்பை அறிவிக்கும் திரையுடன் கூடிய வண்ண எல்சிடி கிளஸ்டர் மற்றும்   3.1 கிலோவாட் பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏரோடைனமிக் ஆற்றல், தங்கு தடையில்லாத நிலையான, அபாரமான செயல்திறனுடன் கூடிய நீட்டிக்கப்பட்ட வரம்பை வழங்குவதாக அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments