முதல் ஒருநாள் போட்டி!! இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அதன்படி, 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரைக் கைப்பற்றிய அந்த அணி, அடுத்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. 

அதன்படி இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் துவங்கிய வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், கே.எல்.ராகுல் 60 ரன்களும், ரோகித் 57 ரன்களும் அடித்தனர். 

இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவரில் 332 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இவ்விரு அணிகளுக்கான 2வது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments