கோவையில் முதல் முறையாக 5 வித நிகழ்ச்சிகள் ஒரே மேடையில்!!

கோவை மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் சிறந்த அனுபவத்தை தர வேண்டும் என முழு நோக்கத்துடன் லிங்கா ஆர்கிடெக் சார்பாக 'அரங்கம் அதிரட்டுமே' நிகழ்ச்சி வருகிற 13-ஆம் தேதி முதல் நீலாம்பூர் பிஎஸ்ஜி அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியினை சாரல் பேக்ஸ் மற்றும் கார்ஸ் 327 கூட்டு முயற்சியில் 8டி மார்க்கெட்டிங் ஏஜென்சி ஏற்பாடு செய்துள்ளது. மாலை 6 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெறுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சி குறித்து 8டி மார்க்கெட்டிங் நிறுவனர் விஷ்ணு வேணுகோபால் கூறும்போது,
"கோவை மக்கள் பல்வேறு நிலைகளில் தங்களை மகிழ்ச்சியில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுத்தி கொண்டு வருகின்றனர். அவர்களின் பொழுதுபோக்கு தேவையை முழுமையாக நிறைவேற்றம் வகையிலும், முழு பொழுதுபோக்கு நிகழ்ச்சியினை நேரடியாக அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மாயாஜால மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் வகையில் மனநல நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனை மாயாஜால கலைஞர் விக்னேஷ் பிரபு நடத்துகிறார். இதில் அவர் எங்கும் செயல்படுத்தாத மாயாஜால நிகழ்ச்சிகள் மற்றும் மனநல நிகழ்ச்சிகளை நடத்துகிறார். மேலும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் 10 இறுதி போட்டியாளர் விக்னேஷ் ராஜு, சரிகமப லிட்டில் சாம்ப் சீசன் 4 வெற்றியாளர் திவினேஷ் மற்றும் யோகஸ்ரீ ஆகியவர்கள் கலந்து கொண்டு சிறந்த பாடல்களை பாட உள்ளனர். மேலும் இந்தியாவின் தலைசிறந்த டப்பா பீட் என்னும் இசை நிகழ்ச்சியை நடத்தி வரும் சிறுவர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

நிகழ்ச்சியில் கோவையில் முதன்முறையாக சிறந்த அரங்கத்தில் குறைந்த விலையில் பொழுதுபோக்கினை காணும் வகையில் ரு 399 முதல் ரு 1299 வரை நான்கு வகையான டிக்கெட் விற்பனைக்கு உள்ளது. பிரபல இணையதளங்களில் மற்றும் ஆப்புகளில் டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளது." என்று கூறினார்.

Comments