கிணத்துக்கடவில் பிரம்மாண்ட வள்ளி கும்மி ஆட்டம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அசத்தல்...

 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கொங்கு மண்ணின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில் கிணத்துக்கடவில் நடைபெற்ற பிரம்மாண்ட வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காரள வம்சம் கலைச் சங்கம் அழிந்து வரும் கொங்கு நாட்டுப் பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மி உள்ளிட்ட கலைகளை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காரள வம்சம் கலைச் சங்கத்தின் 99-வது வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி கிணத்துக்கடவில் உள்ள கவகாளியம்மன் கோவில் மைதானத்தில் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை கலைச் சங்கத்தின் தலைவர் நித்தியானந்தம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQஇந்த அரங்கேற்றத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டு, சீருடை அணிந்து தாளத்திற்கேற்ப ஆடிய வள்ளி கும்மி ஆட்டம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இந்த விழாவில் பேரூராட்சித் தலைவர் கதிர்வேல் உட்பட ஊர் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கலைஞர்களை ஊக்கப்படுத்தினர் பழைமை மாறாத இந்த கலை நிகழ்ச்சி கிராமியக் கலைகள் மீது இளைஞர்களுக்கு உள்ள ஆர்வத்தை பறைசாற்றுவதாக அமைந்தது.

உங்கள் செய்தியாளர்

-M.சுரேஷ்குமார்.

Comments