அரேபியன் டெஸ்ஸர்ட் விற்பனையில் பிரபலமான மெல்பான் கடை திறப்பு!!



  கோவை போத்தனூர் சாலையில் உள்ள சங்கமம் திருமண மண்டபம் அருகே அரேபியன் டெஸ்ஸர்ட் விற்பனையில் பிரபலமான மெல்பான் கடை இன்று திறக்கப்பட்டது. மெல்பான் கடையை AKS Group சேர்மன் சுல்தான் அமீர் ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் முதல் விற்பனையை ஹாஜி இனயாத்துல்லாஹ் தொடங்கி வைத்த நிலையில் முதல் விற்பனை ஹாஜி உமர் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கடை உரிமையாளர் சுஹைல் அஹமத்:

மெல்பான் கடையில் அனைவருக்கும் பிடித்தமான அரேபியன் டெஸ்ஸர்ட் வகைகள் உள்ளது என்றும் வெளிநாடுகளில் கிடைக்கக்கூடிய இனிப்பு இங்கு கிடைக்கும் என தெரிவித்தார்.

திறப்பு விழா சலுகையாக இங்கு வாங்கும் அரேபியன் டெஸ்ஸர்ட் 10% சிறப்பு தள்ளுபடி உள்ளது எனவும் இங்கு வாங்க கூடிய உணவுகள் குறைந்தது 4 பேர் வரை சாப்பிடும் அளவிற்கு இனிப்புகள் இருக்கும் என கூறினார்.

குறிப்பாக இங்கு 200 ரூபாய் முதல் அரேபியன் டெஸ்ஸர்ட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பல்வேறு வகையான அரேபியன் டெஸ்ஸர்ட் இங்கு உள்ளதாகவும் கூறினார்.

-சீனி, போத்தனுர்.

Comments