அன்னதான கூடம் திறப்பு விழா!!
ஸ்ரீ அம்மா பூமாதேவி கோவிலில் அன்னதான கூடம் திறப்பு விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்மாள் அன்னதான கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. மூலவர் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனை நடந்தது.
விழாவில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்தார். இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். சுப்பாராஜ் சங்கரேஸ்வரி திருவிளக்கு ஏற்றி வைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ராஜ்குமார், கோவில்பட்டி.
Comments