கோவை நிர்மலா கல்லூரியில் பாரதியார் பிறந்த நாளையொட்டி முப்பெரும் விழா!!

மகாகவி பாரதியின் தமிழ் ஆர்வம், கவிதை உள்ளிட்டவைகள் தொடர்பாக பட்டிமன்றம், பேச்சு, கவிதை உள்ளிட்ட போட்டிகளில் தமிழ்த்துறை  மாணவிகள் ஆர்வமுடன்  பங்கேற்பு.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின்  தமிழ்த்துறை,  வானொலிச் செம்மல்  கமலநாதன் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளை சார்பாக   பாரதி விழா கோவை நிர்மலா மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ மாணவியர்களுக்கு  கவிதாசனின் படைப்புலகம் குறித்த தலைப்புகளில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் பத்து கல்லூரிகள் பங்கேற்றன.

முப்பெரும் விழாவாக நடைபெற்ற இதில்,  பாரதியின் பாடல்கள் எவ்வயதைச் சார்ந்தவர்களுக்கு பாடப்பட்டுள்ளன என்பது  குறித்த பட்டிமன்றம் நடைபெற்றது.‌ 

பட்டிமன்ற நடுவராக  அகபதி. அரங்க. கோபால்  பங்கேற்றார். இதில் பெண்களின் பருவங்களை குறிக்கும் வகையில் அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்ற பிரிவுகளின் கீழ் அந்தந்த வயதை ஒத்தவர்கள் கருத்துரை வழங்கினர்.

தொடர்ந்து விழாவின் தொடர்ச்சியாக  பாரதியின் 143 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், சிறப்புச் சொற்பொழிவும் , போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

‌கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட் சகோதரி மேரி பாபிலோலா தலைமையில் நடைபெற்ற விழாவில்,  கல்லூரியின்  செயலர் முனைவர் அருட்சகோதரி, குழந்தை தெரசா  வாழ்த்துரை வழங்க, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சொல்லின் செல்வர் சிந்தனைக் கவிஞர் டாக்டர் .கவிதாசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், பாரதி பாடல்களில்  காணப்படும் சிந்தனைகள் குறித்து என்ன வேண்டும் என்ற நல்லவை எண்ணல் வேண்டும் எண்ணல் என்ற தலைப்பில் பாரதியின் பாடல்களில் காணப்படும் நேர்மறை சிந்தனைகள் குறித்தும்  இளைய சமுதாயத்தினை வழிநடத்திச் செல்கின்ற பாங்கினையும்  முற்போக்கு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு எங்ஙனம் பயன்படுகிறது என்பதையும் பாரதியினுடைய கவிதைகள் வாயிலாக சொல்லின் செல்வர்  சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். 

இன்றைய புதுக்கவிஞர்களுக்கெல்லாம் முன்னோடி பாரதி தான் புத்துலக கவிஞன் அவன் காலம் கடந்தும் வாழுகின்ற சாகா வரம் பெற்ற கவிஞன் என புகழாரம் சூட்டினார்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற பேச்சு, கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் பரிசு தொகையும் பட்டிமன்றத்தில்  பங்கேற்று வாதிட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில்  தமிழ்த்துறை பேராசிரியர்கள், துறை தலைவர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments