காருடன் அஜித்குமார் நிற்பது போன்றும், இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் கேக் தயாரிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி..!
கோவை: கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக காருடன் அஜித்குமார் நிற்பது போன்றும் - உலகைக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் கேக் தயாரிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி..!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள கோவை கே.ஆர்.எஸ் பேக்கரியில் கேக் கண்காட்சி நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வாக கார் ரேஸில் வென்ற அஜித்குமாருக்கும் - உலகைக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் வண்ணமயமான கேக்குகள் தயாரிக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டது.தமிழகத்தில் முதல்முறையாக காருடன் அஜித் குமார் நின்று இருப்பது போன்ற கேக் ரசிகர்களையும் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது.
மேலும் குழந்தைகளுக்கு கேக் தயாரிப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments