தேசிய வருவாய் வழி திறனறிதல் உதவித்தொகைத் தேர்விற்கான சிறப்பு பயிற்சிகள் தொடக்கம்!!
கந்தர்வகோட்டையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறனறிதல் உதவித்தொகைத் தேர்விற்கான சிறப்பு பயிற்சிகள் தொடக்கம். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.சின்னதுரை அவர்கள் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஸ்டாலின் நாராயணசாமி பயிற்சி மையம் இணைந்து நடத்தும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான என்.எம்.எம்.எஸ் என்று அழைக்கப்படும் தேசிய வருவாய் வழி திறன் உதவித்தொகை பெறும் தேர்விற்கான பயிற்சி முகாம் தொடக்க விழா டிச 26 அன்று நடந்தது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் கு.துரையரசன் தலைமை வகித்தார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
என்.எம்.எம்.எஸ் தேர்வு தமிழ்நாடு அரசால் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்வு பெறும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாதம் 1000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத் தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. மனத்திறன் தேர்வு மற்றும் படிப்பறிவு திறன் தேர்வு என பகுதிகளாக 180 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் இரண்டு பகுதிகளாக தேர்வுகள் நடைபெறும். தேர்வில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் ஸ்டாலின் நாராயணசாமி பயிற்சி மையமும் இணைந்து சிறப்பு பயிற்சி வகுப்பை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கந்தர்வகோட்டை, வெள்ளாளவிடுதி, குளத்தூர்நாயக்கர்பட்டி, கல்லாக்கோட்டை, துவார் ஆகிய ஐந்து இடங்களில் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் இப்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கிவைத்து பேசும்போது மாணவர்கள் இளம் வயதிலேயே இதுபோன்ற போட்டித்தேர்வுகளை எழுதி பயிற்சி பெறுவதன் மூலம் தன்னம்பிக்கை வளர்கிறது என்றும் பிற்காலத்தில் கல்லூரிப் படிப்புகளை முடித்தவுடன் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட உயர் பதவிகள் பெறுவதற்கு வழிவகுக்கும் என்று இவ்வாய்ப்பை எட்டாம் வகுப்பு பயிலும்போதே மாணவர்கள் தொடங்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திராவிட முன்னேற்றக் கழக கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மங்களாகோயில் ம.பரமசிவம் கலந்துகொண்டு வாழ்த்தி பேசும்போது கல்விக்கு தமிழக முதல்வர் வழங்கும் முக்கியத்துவத்தை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினார். போட்டித்தேர்வுகள் குறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் பேசினார். ஆத்மா கமிட்டி சேர்மன் நியூஸ் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மு .முத்துக்குமார் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் அ .ரகமத்துல்லா அனைவரையும் வரவேற்றார். இதில் ஆசிரியர் முருகன், சமூக ஆர்வலர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சிக்கு பயிற்சியாளர்களாக வி.நித்யா, ஜி.ந்தினி, பி.பிரேமா, எஸ்.ரேவதி ஆகியோர் கந்தர்வகோட்டை பயிற்சி மையத்திலும்,லாவண்யா, பிரபா , மகாலெட்சுமி, சிந்து நதி, கவிதா, தேவயானி ஆகியோர் துவார், வெள்ளாளவிடுதி, குளத்தூர்நாயக்கர்பட்டி, கல்லாக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் பயிற்சி மையங்களில் தன்னார்வலர்களாக பயிற்சியளித்து வருகின்றனர். நிறைவாக ஸ்டாலின் நாராயணசாமி கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மகேந்திரவர்மன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.
Comments