ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை மருத்துவர் பரிசு வழங்கி பாராட்டு!!
கந்தர்வ கோட்டை அரசு மருத்துவமனை சார்பில் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை மருத்துவர் பரிசு வழங்கி பாராட்டு .
கந்தர்வகோட்டை டிச 16
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை சார்பில் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கான பரிசளிப்பு விழா கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
எந்த நோய்களையும் குணப்படுத்தக்கூடிய மருத்துவ வசதிகள் தற்போது உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாக்க காற்று ,நீர், மண் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாப்பது மிக முக்கியமாகும். அது மட்டுமல்லாமல் குழந்தைகளாகிய நீங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உங்கள் ஊரில் உங்கள் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் , பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்ட ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார் . இந்நிகழ்வில் ஆலோசகர்
ண்ணகி செவிலியர்கள் சாந்தி, யசோதா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஏழாம் வகுப்பு மாணவர் முகேஸ்வரன், இராண்டாம் பரிசு மாணவி சுவேதா, மூன்றாவது பரிசு எட்டாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ உள்ளிட்டோருக்கு கந்தர்வக்கோட்டை தலைமை மருத்துவர் சாரதா பரிசு வழங்கி பாராட்டினார்.
நிறைவாக ஆங்கில பட்டதாரி ஆசிரியை சிந்தியா நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.
Comments