கோயம்புத்துார் மாரத்தான் இன்று நடைபெற்றது!!

கோவையின் மிகப்பெரிய மாரத்தான் போட்டியான கோயம்புத்துார் மாரத்தான் இன்று நடைபெற்ற நிலையில் சில இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையின் மிகப்பெரிய மாரத்தான் போட்டியான  கோயம்புத்தூர் மாரத்தான்2025  புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக இன்று நடைபெற்றது. இதில் 25,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாரத்தான் போட்டியை மத்திய அரசு உள் துறை அமைச்சகத்தின் கீழ் எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்து மாரத்தானில் அவரும் பங்கேற்றார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

கோவை வ.உ.சி மைதனாம் அருகே துவங்கிய இந்த மாரத்தன் 21 கிலோ மீட்டர்,10,கிலோ மீட்டர், 5கிலோ மீட்டர்  மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ரிலே ஓட்டம் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த மாரத்தான் போட்டி ரேஸ்கோர்ஸ், புலியகுளம்,, அவிநாசி சாலை வழியாக நடைபெற்ற நிலையில் புளியகுளம்- ரெட்பீல்டு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால்  அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாக கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும், போக்குவரத்து காவல்துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments