தூத்துக்குடி மாநகராட்சியை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!!

எந்த குற்ற குறிப்பாணையும் கொடுக்காமல் தலைவர் பொன்ராஜை அவர்களை நிர்வாகம் இடைக்கால வேலை நீக்கம் செய்தது. அதை கண்டித்து இன்று டிசம்பர் 16 காலை தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

காவல்துறையின் தலையீட்டின் பேரில் 

முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சு வார்த்தையில் வேலை நீக்கத்தை வாபஸ் வாங்க Ourland நிர்வாகம் மறுத்தது.

மாநகராட்சி ஆணையரிடம் எழத்து பூர்வமாக கடிதம்  கொடுக்கப்பட்டது.

 ஆனால்  வேலை நீக்க உத்தரவை நிர்வாகம் வாபஸ் வாங்க  மறுத்ததால் மாநகராட்சி அலுவலகம் தூய்மை பணியாளர்கள் முற்றுகையிடப்பட்டது.

 இறுதியில் மேயர் தலையிட்டு இடைவேலை நீக்க உத்தரவை வாபஸ் பெற வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.

AICCTU மாநில துணைத்தலைவர் சகாயம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் AICCTU மாவட்ட செயலாளர் தோழர் சிவராமன் AICCTU மாவட்ட தலைவர் அம்ஜத்  மற்றும் சங்க நிர்வாகிகள் பொன்ராஜ், பாலமுருகப் பெருமாள், முருகன். P, கருப்பசாமி, நல்லமுத்து, லட்சுமி,  வெங்கடேஷ்வரி உட்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-பரணி பாலா.

Comments