ஶ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிஐஐ உடன் இணைந்து டி-எக்ஸ்.எட்ஜ் திட்டத்திற்கான மையம் துவக்கம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி டீ எக்ச் -எட்ஜ் (DX-EDGE) (Digital Excellence for Growth and Enterprize) (டிஜிட்டல் சிறப்பு வளர்ச்சி மற்றும் நிறுவனம்) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.             


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி அறங்காவலர் கே. ஆதித்யாவுடன் இணைந்து ,தலைமை தாங்கினார்.

விழாவில் பேசிய அவர், 

விரைவான டிஜிட்டல் மாற்றத்தின் சகாப்தத்தில் தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மேம்பட்ட திறன்களுடன் மாணவர்கள் பணியாற்ற வேண்டும் .இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கட்டமைக்கப்பட்ட டிஜிட்டல் பயிற்சி, அனுபவ கற்றல் மற்றும் தொழில்துறை சார்ந்த வழிகாட்டுதல் மூலம் மாணவர்களுக்கு உருவாக் வேண்டும். டீ எக்ச் -எட்ஜ் முயற்சி என்பது இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) தலைமையிலான ஒரு முக்கிய இந்தியத் திட்டமாகும், இது நிதி ஆயோக் மற்றும் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி அமைப்பு உடன் இணைந்து, "விக்சித் பாரத் 2047" தொலைநோக்குப் பார்வையை நோக்கி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs) டிஜிட்டல் முறையில் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இக்கல்லூரியின் சார்பாக தலைமை நிர்வாக அதிகாரி, கே. சுந்தரராமன் டீ எக்ச் -எட்ஜ் Dx-EDGE சார்பாக சிவாஜி சென் (முதல்வர் - டிஜிட்டல், சி.ஐ.ஐ-CII) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

சி.ஐ.ஐ-இன் கோயம்புத்தூர் மண்டலத்தின் முன்னாள் தலைவரும், இன்டோ ஷெல் காஸ்ட் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநருமான ஜே.கணேஷ் குமார் சிறப்புரையாற்றினார். இந்தியாவின் சிறு குரு இதில் துறைக்கு டிஜிட்டல் அதிகாரமளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், பொறியியல் பட்டதாரிகள் புதுமை சார்ந்த மனநிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொலைதூரத்தில் இணைந்த CII-யின் துணை இயக்குநர் ஜெனரல் சுஜித் ஹரிதாஸ், MSME-களில் தொழில்நுட்ப ஏற்றுக்கொள்ளலை விரைவுபடுத்துவதில் DX-EDGE போன்ற தேசிய டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.

இவ் விழாவில் சி.ஐ.ஐ-இன் அதிகாரிகள் - ஷிம்னா பி. (துணை இயக்குநர் மற்றும் தலைவர், சி.ஐ.ஐ-இன் கோயம்புத்தூர் மண்டல நிர்வாக அதிகாரி, சாய் சரண், டீன்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் இக் கல்லூரியின் முதல்வர் கே. பொற்குமரன் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments