சிப்காட் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் வருடாந்திர ஆய்வு!!
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (18.12.2025) சிப்காட் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை (Kit Inspection) பார்வையிட்டும், அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் மேற்படி காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை ( Reception Slip) வரவேற்பாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுதீர் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.
Comments