2026 ஆம் ஆண்டுக்கான பாங்க் ஆஃப் பரோடா 'ப்ரொபெர்டி ஃபேர் 2026' கண்காட்சி!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
2026 ஆம் ஆண்டுக்கான பாங்க் ஆஃப் பரோடா "ப்ரொபெர்டி ஃபேர் 2026" கண்காட்சி வரும் ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடத்துகிறது. இந்த கண்காட்சி இரண்டு நாட்களிலும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்படும் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
இந்த நிகழ்வைப் பற்றி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி தினேஷ்குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கோவையில் நம்ம பாங்க் ஆஃப் பரோடா "ப்ரொபெர்டி ஃபேர் 2026" இரண்டு நாள் கண்காட்சியில், சிறந்த கட்டுமான நிறுவனங்கள், முன்னணி விளம்பரதாரர்கள் மற்றும் மனை விளம்பரதாரர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், மனைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான குடியிருப்புத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்படும், வீடு வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இக்கண்காட்சி உதவும் என தெரிவித்தார்.
மேலும், இக்கண்காட்சியில் தமிழ்நாட்டின் முதன்மை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இந்த கண்காட்சியில் மனை கடன், வீட்டுக் கடன் மற்றும் பிரத்யேக சலுகைகள் பாங்க் ஆஃப் பரோடாவுடன் இணைந்து வாங்குபவர்களுக்கு உடனடி உதவியை வழங்குகிறது.
இந்த நிகழ்வை சாய் அபிமான் ஏஜென்சி ஏற்பாடு செய்துள்ளது. வரும் ஜனவரி 24ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் இக்கண்காட்சியினை கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் திறந்து வைக்க உள்ளார். கோயம்புத்தூர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து வீடு வாங்க விரும்புவோர் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் உட்பட ஏராளமான பார்வையாளர்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்விற்கு ரேடியோ சிட்டி, கோவை டாக்ஸ் மீடியா பாட்னராக உள்ளனர். ஸ்டால் முன்பதிவுகள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, 95784 88877 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். என தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments