கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா!!

விவசாயிகள்,தூய்மை பணியாளர்கள்,தொழிலாளர்கள் என ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தாம்பூல தட்டுடன் பொங்கல் தொகுப்பு  வழங்கப்பட்டது!!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாநகர் மாவட்ட திமுக, விவசாய தொழிலாளர் அணி  சார்பாக  ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி,வெல்லம்,கரும்பு உள்ளிட்ட  பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க.விவசாய தொழிலாளர் அணி சார்பாக , தமிழர் திருநாள்,தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா  வேலாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது.

கோவை  மாநகர் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி தலைவர் எம்.சிவராமன்   தலைமையில்,

நடைபெற்ற இதில்,தி.மு.க. கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர், துரை செந்தமிழ் செல்வன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு   பொங்கல் பரிசு நலத்திட்டங்களை வழங்கினார்.

இதில் தாம்பூல தட்டு,அரிசி,வெல்லம்,முந்திரி,திராட்சை மற்றும் கரும்பு உள்ளிட்ட  பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர்கள்,தூய்மை பணியாளர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள்  வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,  முருகன், கல்பனா செந்தில்,வா.மா சண்முகசுந்தரம், கார்த்தி, சிவகுமார் ஷாம் சுந்தர், பொன்ராஜ்,நடராஜ்,லக்ஷ்மணன், சாவித்திரி,லதா, சாந்தி, புவனா மோகனாம்பாள்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments