யோகினி வழிபாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும் ‘ஏகா – தி ஒன்’ பல மாநில ஓவிய கண்காட்சி!!
கோவை:பண்டைய இந்தியாவின் மறக்கப்பட்ட பெண் ஞான மரபான யோகினி வழிபாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும் ‘ஏகா – தி ஒன்’ பல மாநில ஓவிய கண்காட்சி மற்றும் அரிய ஆவணப்படத் திரையிடலுடன் கோவையில் இன்று துவங்கியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கொச்சியில் அமோக வரவேற்பைப் பெற்ற இந்த முக்கியமான கலாச்சார முயற்சி, கோவையில் அவிநாசி சாலையில் அமைந்துள்ள கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலைக்கூடத்தில் ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.புகழ்பெற்ற கலைஞரும், கலைத் துறைத் தலைவரும், எழுத்தாளருமான டாக்டர் பீனா உன்னிகிருஷ்ணன், ‘ஏகா – தி ஒன்: 64 யோகினிகளின் பயணம்’ என்ற தலைப்பில் தனது பத்து ஆண்டுகால ஆய்வு மற்றும் படைப்புகளை இக்கண்காட்சியின் மூலம் முன்வைக்கிறார்.
16 மாநிலங்களை கடந்து சுமார் 10,000 கிலோமீட்டர் பயணத்தை உள்ளடக்கிய 81 நாள் தேசிய கண்காட்சி இதுவாகும். இதில், பண்டைய இந்தியாவில் போற்றப்பட்ட 64 யோகினிகளை பிரதிபலிக்கும் 64 அசல் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
காட்சி கலைக்காட்சியுடன் இணைந்து, ‘ஒய் 64: காணப்படாதவற்றின் குரல்கள்’ என்ற சிந்தனைத் தூண்டும் ஆவணப்படமும் திரையிடப்படுகிறது. நியோ திரைப்படப் பள்ளி நிறுவனர் மற்றும் திரைப்பட இயக்குநர் டாக்டர் ஜெயின் ஜோசப் இயக்கிய இந்த ஆவணப்படத்தை டாக்டர் பீனா உன்னிகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்தியா முழுவதும் சிதறிக்கிடக்கும் யோகினி வழிபாட்டுத் தலங்கள், சில இடங்களில் காலப்போக்கில் சிதைந்தும், சில இடங்களில் அணுக முடியாத பகுதிகளில் மறைந்தும் உள்ள அரிய காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
யோகினி தலங்களுக்கு மேற்கொண்ட யாத்திரைகளையும், கலைப் படைப்புகள் உருவான படைப்புப் பயணத்தையும் இணைக்கும் இந்த ஆவணப்படம், பெண் சக்தியின் ஆன்மீகப் பரிமாணங்களையும், நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட பண்டைய அறிவு மரபுகளின் இன்றைய முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இக்கண்காட்சியின் கியூரேட்டோரியல் ஆலோசகராக ஷாஜாதா குர்ராம் செயல்படுகிறார்.
“யோகினிகளை நமது கூட்டு நினைவில் அவர்களின் உரிய இடத்திற்கு மீட்டெடுக்கும் இயக்கமே இது. சமநிலை, சகவாழ்வு, உள் ஞானம், அதிகாரமூட்டும் தலைமையியல் போன்ற போதனைகள் இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமானவை,” என டாக்டர் பீனா உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார்.
பண்டைய ஆன்மீக மரபுகளை சமகால கலைக் கண்ணோட்டத்தில் அனுபவிக்க விரும்பும் கோவை மக்களுக்கு, இந்தக் கண்காட்சி ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments