அரசு பேருந்து டிராக்டர் மோதல்! - ஒருவர் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள தனியார் காபி நிறுவனத்தினர் தொழிலாளிகளை டிராக்டர் மற்றும் தனியார் லாரிகளில் ஏற்றி வருவது வழக்கமாக உள்ளது. இதனைக் கண்டு காவல் ஆய்வாளர்கள் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. அதிக பாரங்களை இயற்றி வரும் வாகனங்களை கண்டும் அதிகாரிகள் காணாமல் செல்கின்றனர். 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

(28.01.2026) அன்று காலை பெரியார் நகரில் இருந்து வரட்டுப்பாறை பகுதிக்கு வேலைக்கு எஸ்டேட்டுக்கு சொந்தமான டிராக்டரில் தொழிலாளர்களை ஏற்றி  வந்து கொண்டிருந்த பொழுது  உருளிக்கல் பகுதியில் வைத்து டிரைவரின் கட்டுப்பாட்டிழந்து  டிராக்டர் அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. டிராக்டரில் இருந்த 3ஆண்கள் 12 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். சிகிச்சை பயனின்றி விக்டோரியா என்பவர்  உயிரிழந்துள்ளார். இதற்கு முன்பும் பலமுறை தொழிலாளர்களை ஏற்றி வரும் ட்ராக்டர்கள் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

இதில் எஸ்டேட் பகுதிகளில் உள்ள வாகனங்களுக்கு எப் சி, இன்சூரன்ஸ் டேக்ஸ் ஆகியவை இல்லாமல் வாகனங்கள் ஓட்டுகின்றனர். இதனைக் கண்டு நடவடிக்கை எடுத்தால் வால்பாறை வட்டார ஸ்ட்ரீட் பகுதியில் ஏகப்பட்ட வாகனங்களை பிடிக்கலாம். இதனை வாகன அதிகாரிகள் மற்றும் காவல்துறை போக்குவரத்து துறையினர் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

விபத்துக்கள் அதிக அளவு ஏற்படும் முன்னே தகுந்த நடவடிக்கை எடுத்தால் பல உயிர்களையும் குடும்பங்களையும் காப்பாற்றலாம். வறுமையின் காரணத்தினால் எஸ்டேட் தொழிலாளர்கள் வேலைக்காக பாதுகாப்பின்றி பயணம் செய்து பலியாகுகிறார்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கும் வால்பாறை வட்டார தொழிற்சங்க நிர்வாகிகளும் கண்டுகொள்வதில்லை. 

இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்று  ஆட்டோ ஓட்டுநர்கள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள், டூரிஸ்ட் வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள் கோரிக்கை வைக்கிறார்கள். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து செய்தியாளர் 

-திவ்யக்குமார்.

Comments