குழந்தைகளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் பிரத்தியேக சக்தியுடனான புதிய ஊட்டச்சத்து பானம் அறிமுகம்!!

கோவையில் சின்னி நம்பி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சார்பில் குழந்தைகளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் பிரத்தியேக சக்தியுடனான புதிய ஊட்டச்சத்து பானம் மெமரி விட்டா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பிரபல உணவு பொருள் தயாரிப்பு நிறுவனமான சின்னி நம்பி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் பல்லாண்டு சோதனைகளுக்கு பிறகு குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மெமரி விட்டா என்ற பெயரில்   அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஊட்டச்சத்து பானம் குழந்தைகளின் ஞாபகத் திறனை ஊக்குவிக்கும் திறன் கொண்டது எனவும் சந்தையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு ஊட்டச்சத்து பானங்களில் உடனடி வளர்ச்சி, உடனடி சக்தி என்றெல்லாம் விளம்பரப்படுத்தினாலும் அவை அனைத்தும் உண்மையானது அல்ல என்றும் அதே வேளையில் தங்கள் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஊட்டச்சத்து பானம் மருத்துவ ரீதியிலும் அறிவியல் பூர்வமாகவும் சோதனை செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர். 

குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆறு மாத காலம் இந்த ஊட்டச்சத்து பானத்தை கொடுத்து பரிசோதித்ததில் அவர்களின் ஞாபக சக்தி அதிகரித்துள்ளதாகவும் எந்த ஒரு வேதிப்பொருட்களும் இல்லாமல் ஆர்கானிக் முறையில் இந்த பானத்திற்கான தயாரிப்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியதுடன், இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது என்றும் உறுதிபட கூறினர். 

மேலும் முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஊட்டச்சத்து பானம் குழந்தைகளை சிறந்த முறையில் ஆரோக்கியத்துடன் வளர்ப்பதற்கு ஒரு முக்கிய உதவும் என்றும் மற்ற பானங்களை விட விலை மற்றும் தரம் ஆரோக்கியம் என அனைத்து தரப்பிலும் மிகச் சிறந்த முறையில் இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments