கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் ‘டக்அவுட்’ (DUGOUT) எனும் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் மையம் துவக்கம்!!
சென்னையை அடுத்து கோவையில் முதல்முறையாக டக்அவுட் (DUGOUT) விளையாட்டு மையம் புரூக் பீல்ட்ஸ் வளாகத்தில் துவங்கப்பட்டது..
தமிழ்நாட்டின் முன்னணி விளையாட்டு மற்றும் இன்டோர் பொழுதுபோக்கு நிறுவனமான டக்அவுட் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட், தனது 8-வது மையத்தை கோயம்புத்தூரில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் துவக்கியது…
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புரூக்பீல்ட்ஸ் நான்காவது தளத்தில் தி சினிமாஸ் எதிர்புறம் துவங்கி உள்ள டக் அவுட் விளையாட்டு மைய துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் தாளாளர் அருள் ரமேஷ் கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தார்..டக் அவுட் விளையாட்டு மையத்தின் சிறப்புகள் குறித்து டக் அவுட் நிறுவனர் பிரசாந்த் மற்றும் பங்குதாதர்கள் அனிருத் கண்ணன் ,பத்ரி நாராயணன், ஹசைனுதீன் ஆகியோர் கூறுகையில்,
கோவையில் முதல் முறையாக மிகப் பெரிய நியான்-குளோ (Neon-Glow) இன்ஃப்ளேடபிள் பார்க் ஆக டக் அவுட் துவங்கப்பட்டுள்ளதாகவும்,
குறிப்பாக முழுமையான நியான் ஒளி அலங்காரத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த இன்டோர் விளையாட்டு பூங்கா, குளோ-இன்-தி-டார்க் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்..
நிஞ்ஜா கோர்ஸ், நீளமான ஸ்லைட்கள், இன்ஃப்ளேடபிள் ராக் கிளைம்பிங், சர்ஃபிங் ஸோன், ஸ்பைடர் வால் சவால்கள், ஃபோம் பிட், பால் பிட் மற்றும் பல்வேறு தடையமைப்பு (Obstacle) விளையாட்டுகள் இதில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
உடற்பயிற்சியையும் உற்சாகமான பொழுதுபோக்கையும் ஒருங்கிணைக்கும் இந்த நவீன வசதி, 3 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் நண்பர் குழுக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு தளமாக அமைகிறது. நியான்-குளோ கருத்தாக்கம், பாரம்பரிய இன்ஃப்ளேடபிள் விளையாட்டுகளை புதிய காட்சி அனுபவமாக மாற்றும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments