டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்,க்ரூப் 4 சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது!!

கோவை காந்திபுரம் க்ராஸ்கட் சாலையில் உள்ள, சங்கர் ஐஏஎஸ் அகாடமியில், “சிகரம் தொடு” என்ற தலைப்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல், மாநாடு, மற்றும், க்ரூப் 4 சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை காந்திபுரம் க்ராஸ்கட் சாலையில் உள்ள,சங்கர் ஐஏஎஸ் அகாடமியில், “சிகரம் தொடு” என்ற தலைப்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல், மாநாடு, மற்றும், க்ரூப் 4 சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது 

இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கோவை மாவட்ட பயிற்சி துணை ஆட்சியர், ஹரி பிரியங்கா, கலந்து கொண்டு, மாணவர்களையும் பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் வகையில், சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது.. 

அரசு சேவையை இலக்காகக் கொண்டு பயணிக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, தொடர்ச்சியான உழைப்பு மற்றும் சரியான வழிகாட்டுதல் இன்றியமையாதவை என வலியுறுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக

ஊரக வளர்ச்சி துறை

இயக்குநர் 

விஜய், டிசிடிஒ செல்வ சங்கர், கிருஷ்ண பிரசாத், 

மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார துறை உதவியாளர் 

சந்தோஷ், கூட்டுறவு சங்கங்கள் துறை மூத்த ஆய்வாளர் தனலட்சுமி 

ஆகியோர் பங்கேற்று, டிஎன்பிஎஸ்சி தேர்வு தயாரிப்பு, நேர மேலாண்மை, மன உறுதி, தேர்வுக்குப் பிந்தைய அதிகாரியின் வாழ்க்கை மற்றும் அரசு சேவையின் பொறுப்புகள் குறித்து தங்களது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் டிஎன்பிஎஸ்சி க்ரூப் 1 மற்றும் க்ரூப் 2 ஆகிய சேவைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும், பங்கேற்றனர். தொடர்ந்து 

“சிகரம் தொடு” நிகழ்வு, டிஎன்பிஎஸ்சி கனவுடன் பயணிக்கும் மாணவர்களை அவர்களின் உயரங்களை அடைய வழிகாட்டும் ஒரு ஊக்க நிகழ்வாக அமைந்தது. தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி க்ரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சாதனை புரிந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பாராட்டு நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் 

சங்கர் ஐஏஎஸ் அகாடமி கோவை கிளைத் தலைவர் அருண் செந்தில்நாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments