வால்பாறை வட்டார பகுதியில் பழுதான சாலைகள்!- கண்டும் காணாமல் செல்லும் அதிகாரிகள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட் சிங்கோனா உபாசியில் உள்ள கல்யாண பந்தல் பகுதியில் சாலை மிகவும் தரமற்ற முறையில் உள்ளது 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

108 வாகனங்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அரசு பேருந்துகளும் அவ்வழியே செல்லும் பொழுது பழுதாகி நிற்கின்றனது மற்றும் அவ்வழியே வரும் வாகனங்களில் ஒவ்வொரு உதிர் பாகங்களும்  உடைந்து செல்கின்ற அளவிற்கு அச்சாலை உள்ளது. 

இதனை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி ஆய்வாளர்கள் அவ்வழியே செல்லும் பொழுது கண்டும் காணாமல் செல்கின்றனர். வால்பாறை பொதுமக்கள் வாகன ஓட்டுனர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகும் அவல நிலை உருவாகியுள்ளது. ஏதேனும் பெரிய விபத்து ஏற்படும் முன்னே அந்த சாலையை புதுப்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என வால்பாறை ஆட்டோ ஓட்டுநர்கள் வியாபாரிகள் தோட்ட தொழிலாளிகள் அரசு பேருந்து ஓட்டுநர்கள் கூறி வருகின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை செய்தியாளர் 

-திவ்யக்குமார்.

Comments