எக்கி பம்ப் நிறுவனம் ஜெர்மனியின் ஹோமா பம்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் அதிநவின கழிவுநீர் பம்ப்களை அறிமுகம் செய்தனர்...

 

எக்கி பம்ப் நிறுவனம் ஜெர்மனியின் ஹோமா பம்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் அதிநவின கழிவுநீர் பம்ப்களை அறிமுகம் செய்தனர். உலகின் முன்னணி ஐந்து கழிவுநீர் பம்ப் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜெர்மனியின் ஹோமா பம்ப் நிறுவனம் மற்றும் எக்கி பம்ப்  நிறுவனமும் இணைந்து அதிநவின லினஸ் தொழில் நுட்ப கழிவுநீர் பம்ப் செட்டுகளை அறிமுகப்படுத்தினர்.எக்கியின் லினஸ் பம்ப் தொழில்நுட்பம் கழிவுநீர் பம்ப்களில் உள்ள மிக முக்கியமான சவால்களில் ஒன்றான அடைப்பு ஏற்படுவதற்கு முன்பே நீக்கித் தடுக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கழிவுநீர் வெளியேற்றம் பெரும் சவாலாக உள்ளது 70 சதவீதத்திற்கும் மேலான கழிவுநீர் சுத்திகரிக்காமல் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெளியேற்றப்படுகிறது. இதனால் சுற்றுபுறச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. இந்த கழிவுநீர் பம்புகள் குடியிருப்பு வளாகங்கள்,வணிக நிறுவன கட்டிடங்கள்,தொழில்துறை கழிவுநீர் பயன்பாடுகள்,நகராட்சி மற்றும் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் அமைப்புகளுக்கு ஏற்றது. எக்கி பம்ப் குழும இணை தலைமை அதிகாரி கனிஷ்கா ஆறுமுகம் கூறுகையில்:-

ஜெர்மனியின் ஹோமா பம்ப்-ன் நவீன தொழில் நுட்பம் எக்கி பம்ப்-ன் உற்பத்தித் திறன் மற்றும் நாடு முழுதும் உயரிய வணிக சேவைகளை இணைப்பது மூலம் வாடிக்கையாளர்களுக்கு  குறைந்த செலவில் நல்ல தரமான பம்புகளை வழங்குகிறது. இந்தியா மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளுக்காக உலகத் தரம் வாய்ந்த கழிவுநீர் பம்புகளை உருவாக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் மேலும் எக்கி ஹோமா நிறுவனம் இந்தியா, ஆசியா மற்றும் பிற வளர்ந்து வரும் சந்தைகளுக்கு உயர்தர செயல்திறன் கொண்ட கழிவுநீர் பம்ப்களை வழங்கும் நிறுவனமாக திகழ்கிறது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பம்ப்செட் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான எக்கி குழுமம், வளர்ச்சி மற்றும் உற்பத்தி திறனை விரிவு படுத்தும் நோக்கில் ஒபன்வெல் பம்ப் செட் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான டெக்கான்  பம்ப்ஸ் நிறுவனத்தை 2013-ம் ஆண்டு கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

-சீனி,போத்தனுர்.

Comments