குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட கனரக வாகனம் பறிமுதல் - ரூ.10000 அபராதம் - ஓட்டுநர் உரிமம் ரத்து!!
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் I.P.S., அவர்கள் உத்தரவுப்படி, நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சுனில் T.P.S. அவர்கள் மேற்பார்வையில் நகர போக்குவரத்து காவல் துறையினர் எட்டையபுரம் சாலையில் 23.03.26 ம்தேதி மாலை வாகன சோதனை நடத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது வந்த கனரக வாகனத்தை சோதனை செய்த போது அதனை ஓட்டி வந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் மது போதையில் இருப்பது மூச்சு பரிசோதனை கருவி மூலம் கண்டறியப்பட்டது.
மேற்படி நபர் மீது குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றம் மூலம் சுமார் 10000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மேற்படி குடிபோதை ஓட்டுநரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments