டி20 உலகக் கோப்பை நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா மீண்டும் உலக சாம்பியன்!!
அகமதாபாத்: சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது முறையாக (Back-to-Back) கோப்பையை வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார் இறுதியில் சிவம் துபேயின் அதிரடியால் இந்தியா 20 ஓவர்களில் 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தின் முதுகெலும்பை உடைத்தார் அக்ஸர் படேலின் சுழலில் சிக்கிய அந்த அணி 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
2007 மற்றும் 2024-க்கு பிறகு இந்தியா வெல்லும் 3-வது டி20 உலகக் கோப்பை ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அதிரடியாக ஆடி 89 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர் இந்திய அணியின் இந்த சாதனைப் பயணம் உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணைத் தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.
Comments