ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 21வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!!

கோவை:எஸ்.என்.ஆர். அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பட்டமளிப்பு அணிவகுப்புடன் தொடங்கியது. இதில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்  டாக்டர் சுந்தர், மணிப்பால் பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் முதல்வருமான டாக்டர் கோபாலகிருஷ்ணன் ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். ஸ்ரீஹரி மற்றும் கல்லூரியின்  அனைத்து துறைத் தலைவர்களும் அரங்கினுள் பட்டமளிப்பு முறைப்படி அழைத்து வரப்பட்டனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

டாக்டர் ஸ்ரீஹரி பட்டம்  பெறும் மாணவர்கள் தங்களின் கல்வி அறிவை வளர்ச்சிக்கான அடிப்படையாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் பட்டம்  பெறும்  மாணவர்களையும் பதக்கம் பெற்றவர்களையும் வாழ்த்தி,பட்டபடிப்பின் முக்கிய நோக்கமே  சமுதாயத்திற்கு சேவை செய்வதுதான் என்று வலியுறுத்தினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான டாக்டர் கோபாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு ஊக்கமும் வழிகாட்டுதலும் அளித்தார்.

இந்த நிகழ்வில் மொத்தம் 80 இளநிலை பட்டதாரிகளும் 12 முதுநிலை பட்டதாரிகளும் பட்டங்களைப்  பெற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments