காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அனன்யா செல்டர்ஸ் சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம் மற்றும் உணவு கூடம் புதுப்பிப்பு!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா, பள்ளி நூற்றாண்டு நினைவு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பள்ளி கட்டிடங்களை கட்டித் தந்த அனன்யா குழுமத்திற்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவிற்கு முதன்மை விருந்தினராக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் . பவன்குமார் ஜி கிரியப்பனவர் கலந்து கொண்டு பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து, கல்வி மலர் புத்தகத்தை வெளியிட்டு நன்கொடையாளர்களை பாராட்டி னார்.
சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டார். மேலும் விழாவில் கோயம்பததூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உயர்திரு ரா பாலமுரளி கலந்துகொண்டார்.
விழாவிற்கு பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியரும் பள்ளியின் மூத்த மாணவருமான பொ. ராமலிங்கம் தலைமை வகித்தார்.
விழாவில் ஏற்புரையாற்றிய அனன்யா குடும்பத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆ யுவராஜ் பேசும்போது :-
நாம் வாழும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தில் கொண்டு இப்பள்ளிக்கு எங்களது பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு மூலம் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் கட்டிடங்களை புணரமைத்தும் உணவுக்கூடத்தை உணரமைத்தும் கொடுத்துள்ளோம். இனிவரும் காலங்களில் அனைத்து விதமான உதவிகளும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
விழாவில் அனன்யா குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் உமா மகேஸ்வரி யுவராஜ், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments