மார்ச் 8 முதல் 14 வரை நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனையுடன் அறுவை சிகிச்சைக்கு 10 சதவீத கட்டண சலுகை

கோவை,ஆர்.எஸ் புரம் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் உலக குளுக்கோமா வாரம் முன்னிட்டு மார்ச் 8 முதல் 14 வரை நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படுவதுடன் அறுவை சிகிச்சைக்கு 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கண் மருத்துவத்தில் கடந்த 46 ஆண்டுகளாக சேவை செய்து வரும் தி ஐ பவுண்டேஷன் குழுமம் தென்னிந்தியாவில் 27 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.அந்த வகையில்

குளுக்கோமா விழிப்புணர்வு குறித்து கோவை ஆர்.எஸ் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

குளுக்கோமா அல்லது கண் அழுத்த நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலக குளுக்கோமா சங்கத்தின் முயற்சியாக ஆண்டுதோறும் உலக குளுக்கோமா வாரம் அனுசரிக்கப்படுகிறது.இந்த நோய் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதால், அவ்வப்போது கண் பரிசோதனை மிகவும் அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சுமார் 3 முதல் 5 சதவீத மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அதில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு இந்த நோய் இருப்பதை அறியாமல் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தி ஐ பவுண்டேஷன் மருத்துவ இயக்குநர் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி கூறுகையில்:-

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.சர்க்கரை நோய்,உயர் கிட்டப்பார்வை,கண் காயம், ஸ்டீராய்டு மருந்து பயன்பாடு போன்ற காரணங்களால் குளுக்கோமா ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 14 வரை தி ஐ பவுண்டேஷன் அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படுவதுடன், அறுவை சிகிச்சைக்கு 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.

மேலும் பல இடங்களில் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடைபெறுகின்றன.குளுக்கோமா நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பார்வை இழப்பைத் தடுக்க முடியும் என்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தி ஐ பவுண்டேஷன் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பேட்டி:-

டாக்டர் சித்ரா ராமமூர்த்தி

மருத்துவ இயக்குநர்

தி ஐ பவுண்டேஷன்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments