மேல்மருவத்தூர் பங்காரு அம்மா 86வது அவதார விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் மக்கள் நலப்பணிகள் வழங்கப்பட்டது!!
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் நலப்பணி விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. ஆர்.முருகன் தலைமை வகித்து ஏழை எளிய மக்களுக்கு தொழில் செய்து பிழைக்க 25 பேருக்கு தையல் இயந்திரங்கள், மருந்து தெளிப்பான் கருவி, இட்லி பாத்திரம், கண்பார்வயற்ற இளைஞருக்கு இசைக்கருவி வாங்க நிதியுதவி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சைக்கிள் மற்றும் 250 பெண்களுக்கு சேலை, ஆடவர்களுக்கு வேஷ்டி துண்டு ஆகிய நலத்திட்டங்களை வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை வேளாண்மை துறை அதிகாரி பிரேம்குமார் தொடங்கி வைத்தார்.
விழாவில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வி, விஜயலெட்சுமி, காஞ்சனா, மாரியப்பன், சக்திவேல், வேள்விக்குழு கிருஷ்ண நீலா, திருவிக நகர் சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், செயலாளர் கணேஷ், தளவாய்புரம் ராஜ், கழுகுமலை அழகர், இந்திராநகர் அழகு மாணிக்கம், அண்ணாநகர் சிவஞானம், இளைஞர் அணி மணி, பாண்டி, புதிய துறைமுகம் கண்ணகி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் செல்வி, பரமேஸ்வரி, அகிலா, காசியம்மாள், முத்துலெட்சுமி, சாந்தி, வீரலெட்சுமி உட்பட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.
Comments