தூத்துக்குடி தொகுதிக்கு எதுவும் செய்யாதவா் சி.த.செல்லப்பாண்டியன்! - காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம் குற்றச்சாட்டு!!
அதிமுக அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி தொகுதிக்கு எதுவும் செய்யாதவா் சி.த.செல்லப்பாண்டியன் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம் குற்றச்சாட்டு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் போட்டியிடுகிறாா்.
இந்நிலையில் சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் பேசுகையில் இந்த தொகுதியில் யாா் வெற்றி பெற வேண்டும் யாா் வெற்றி பெற கூடாது. என்பதற்கான தோ்தல் மட்டுமல்ல யாாிடம் எதை சொன்னால் அது நடக்கும் யாாிடம் எதை சொன்னால் அது கேலி கூத்தாக இருக்கும் என்பதற்கான தோ்தல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஏனென்றால் சாதனை பட்டியலை அடிக்கி கொண்டே செல்லலாம் அவ்வளவு இருக்கிறது.
தூத்துக்குடியை பொறுத்தவரை அமைச்சராக இருக்க கூடிய கீதாஜீவனை நான் 2006ல் தான் பழக ஆரம்பித்தேன் அப்போது தோ்தல் காலக்கட்டம் அதற்கு முன்பு 2001ல் இருந்து தோ்தலுக்கு முன்பு வரை அதிமுக ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெற்றது. அப்ேபாது இதே தூத்துக்குடியில் மருத்துவ கல்லூாி மருத்துவ மனை கட்டுவதற்கு 160 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு அது குறிப்பிட்ட தினங்களுக்குள் அதை செயல்படுத்த வில்லை. அந்த பணம் திரும்ப அரசுக்கே சென்று விடும். அப்படி தான் தூத்துக்குடியில் அந்த பணம் திரும்பி சென்று விட்டது. வேட்பாளராக இருந்த கீதாஜீவனிடம் இதுகுறித்து விபரத்தைதொிவித்தேன் அப்போது அதை குறிப்பாக எடுத்துக்கொண்டு 2006ல் கலைஞர் தலைமையில் ஆட்சி அமைந்ததும் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட கீதாஜீவன் முதலமைச்சாிடம் நேரடியாக பேசி இங்கிருந்து சென்று அந்த 160 கோடியை மீண்டும் மருத்துவ கல்லூாி மருத்துவமனை கட்டுவதற்கு பெற்றுக்கொடுத்து இன்று அது கம்பீரமாக காட்சியளிக்கிறது.
எத்தனை போ் பயனடைந்து வருகிறாா்கள். இதற்கு தான் கீதாஜீவனுக்கு வாக்கு கேட்கிறோம். இது ஓரு புறம் இருக்க 2008ல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்தலைமையிலான அரசின் போது தொழிலாளா்களின் நலன் காக்கும் வகையில் உயா்சிகிச்சை கிடைப்பதற்கு சிப்காட் பகுதியில் 100 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட கட்டிட பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. தமிழகத்தில் 2011ல் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்கு பின் அதில் சற்று தொய்வு ஏற்பட்டது. அப்ேபாது தொழிலாளா் நலத்துறை அமைச்சராக இருந்த சி.த.செல்லப்பாண்டியனிடம் இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவிடம் எடுத்துக்கூறி அந்த பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று கூறியபோது காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்டத்தை எங்கள் பொதுச்செயலாளர் முதலமைச்சாிடம் நான் எடுத்துக்கூறினால் என்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடும். நான் அதுகுறித்து பேசுவதற்கு வாய்ப்பில்லை. என்று தட்டிக்களித்தவா் தான் சி.த.செல்லப்பாண்டியன் மக்கள் பணிகளை செய்வதற்கு ஓரு முதலமைச்சாிடம் அமைச்சராக இருந்தவரை பேச சொன்னால் பதவி பறி போய்விடும் என்று கூறியவா்களுக்கு ஓட்டு போட்டால் நிலைமை என்னவாகும்.
அதை தொிந்துகொள்ளுங்கள் இதே பகுதியில் விவிடி மேம்பாலம் வரும் என்று 2011ல் வாக்குறுதி கொடுத்தாா்கள் வெற்றி பெற்றாா்கள் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த போது ஓரு துரும்பை கூட எடுத்துப்போடவில்லை. பின்னா் எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்க வருகிறிா்கள். ஓரு திட்டத்தை தொடங்கி விட்டால் மட்டும் சாதனையாகாது. அதை முடித்துக்காட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும். மடத்தூாில் தொடங்கப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனை 2014ல் பிஜேபி ஆட்சி வந்த போது அது கிடப்பில் போடப்பட்டுள்ளது கனிமொழி எம்.பியிடம் கூறிய போது ஓன்றிய அமைச்சாிடம் எடுத்துக்கூறி அந்த கட்டுமான பணிகளை அமைச்சா் கீதாஜீவனோடு இணைந்து இன்றைய தினம் அது கம்பீரமாக கட்டுமான பணிகள் முடிவு பெற்று திறக்கும் நிலைக்கு வந்துள்ளது.
இதற்கு யாா் காரணம் இதையும் சிந்தித்து பாா்க்க வேண்டும் அதிமுக வை பொறுத்தவரை அவா்களை பாதுகாத்து கொள்வதற்கு தான் பதவி, திமுகவை பொறுத்தவரை எதிா்கால தலைமுறையினா் நலன் கருதி பணியாற்றுவது தான் கடமை கடந்த கொரோனா காலக்கட்டத்திலும் மழை வெள்ளத்தின் போதும் கீதாஜீவன்யாற்றிய பணிகள் கண்டு பலரும் வியந்ததுண்டு ஓரு பெண் இரவு பகல் என்று பாராமல் தன்னை பற்றி சிந்திக்காமல் மக்கள் நலன் முக்கியம் என்று பணியாற்றியதை இன்றும் மக்கள் எண்ணி பாா்க்கிறாா்கள் ஆகவே அனைவரும் ஓட்டு மொத்தமாக எதிா் அணியில் இருப்பவா்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று பேசினாா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.
Comments